குறைவான ஈரப்பதம், அதிக வெப்ப நிலை, இடமாற்றம் செய்யும் போது ஏற்படும் காயங்கள் ஆகியன. ஏப்ரல் - ஜூன் மாதங்களில் தோன்றும்.
வேலமரம், வாகை, மூங்கில், சவுக்கு, யூகலிப்டஸ், குமிழ், வேம்பு, மலைவேம்பு, சந்தனம், கடம்பு, தேக்கு முதலியன.
மண் மற்றும் வேர்களில் தோன்றும் பூஞ்சைகளான பியூசேரியம், லேசியோடி புளோடியா, ரைசோக்டொனியா, ஸ்கெலரோட்டியம் மற்றும் பாக்டீரியாக்களான சூடோமானஸ் ஆகியவை. லேசியோடிபுளோடியா தியோபுரோமே சவுக்கில் ஏற்படுத்தும் நோய் தாக்கத்தை முதன்முதலாக வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் அறிவித்துள்ளது.
1. இலை வறட்சி, கிளைகள் மற்றும் தண்டுப்பகுதி வறட்சி.
2. கழுத்துப் பகுதியில் சிறிய கருப்புநிற படலம் உருவாதல்.
3. நோய் முற்றிய நிலையில் செடிகள் இறப்பு.
சுகாதார பராமரிப்பு, தக்க சாகுபடி முறைகள், பூஞ்சாணக்கொல்லி ஆகிய ஒருங்கிணைந்த அனுகுமுறை மூலம் கட்டுப்படுத்தலாம். கோடையில் பாதுகாப்பான நீர்ப்பாசனம் மற்றும் மாதமிருமுறை பாவிஸ்டின் அல்லது டைத்தேன் M-45 (0.1 % ஏ.ஐ.) கரைசலை மண்ணில் ஊற்றலாம். அதன்பின் இருவாரம் கழித்து உயிரிகட்டுப்பாட்டு முறைகளை கையாண்டு கட்டுப்படுத்தலாம். சூடோமோனஸ் புளோரசன்ஸ் மற்றும் டிரைகேடெர்மா விரிடி உபயோகிப்பது கூடுதல் பலன் தரும்.
பெருமரத்தில் பாக்டீரியா கழுத்து அழுகல் நோய்க்குறிகள்
சவுக்கில் கழுத்து பட்டை அழுகல் நோய்
சவுக்கில் கழுத்து பட்டை அழுகல் நோய்