முக்கிய மர இனங்களான வேல், வாகை, மூங்கில், ஈட்டி, யூகலிப்டஸ், குமிழ், வேம்பு, மலைவேம்பு, கடம்பம், சந்தனம், தேக்கு ஆகியவற்றின் நாற்றங்கால், இனப்பெருக்க கூடம் மற்றும் விதைத் தோட்டங்களில் காணப்படும் நோய் ஆகும்.
முன்பே தீர்மானிக்கப்பட்ட காரணிகள்
குளிர்காலத்திலும், முறையற்ற நாற்றங்கால் பராமரிப்பு காரணமாகவும் தோன்றும்.
வேம்பில் ஓய்டியம் அசாடிரேக்டே, குமிழில் பைலாக்டீனியா சபல்டா, எரிசிபேசியே குடும்ப உயிரிகள் தேக்கிலும் சாம்பல் படல நோயை உண்டாக்குகின்றன. பைலக்டேனியா டால்பர்ஜியே கிருமியால் ஈட்டியில் நோய் ஏற்படுகிறது.
நோய்க்குறிகள்
1. இலைகளில் வெண்மையான திட்டுகள் தோன்றும். பிறகு முழுவதும் பரவி சாம்பல் படலமாக காணப்படும்.
2. நோய் முற்றிய நிலையில், இலைகளும், குருத்துகளும் முழு வளர்ச்சியடையாமல் விழுந்துவிடுகின்றன.
3. குமிழில் இலை அடிப்பகுதியில் புள்ளிகள் தோன்றி, அதன் மேல்புறம் பழுப்பு மஞ்சள் நிறம் காணப்படும்.
4. சிசுவில் இப்பூஞ்சையானது மஞ்சள் நிற இழைகளை இலை அடிப்பகுதியில் தோற்றுவிக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
சுகாதார பராமரிப்பு முறைகள், தக்க வளர்ப்புமுறைகள் மற்றும் பூஞ்சைக்கொல்லிகள் மூலம் ஒருங்கிணைந்து கட்டுப்படுத்தலாம். பாவிஸ்டின் (0.01%) கரைசலை இலைகளில் தெளித்தும், தேக்கில் கந்தக தூளை தூவியும் பிறகு பேகார், மார்டிசான் மற்றும் கேலிக்சின் பூஞ்சை கொல்லி உபயோகித்தும் கட்டுபடுத்தலாம். கந்தகதூள் தூவிய பிறகு பூஞ்சைக்கொல்லி உபயோகித்து சிசு செடியில் நோயை கட்டுப்படுத்தலாம்.