Enquire Now
நோய் விளக்கம்
  
   வேலமரம், வாகை, மூங்கில், ஈட்டி, யூகலிப்டஸ், குமிழ், வேம்பு, மலைவேம்பு, கடம்பம், சந்தனம் மற்றும் தேக்கு பயிர்களில் நாற்றங்கால், இனப்பெருக்க கூடம் மற்றும் இளம் தோப்புகளில் காணப்படுகிறது.

முன்பே தீர்மானிக்கப்பட்ட காரணிகள்
   முறையற்ற நாற்றங்கால் பராமரிப்பு.

பாதிக்கப்படும் மர இனங்கள்

 

   வேலம், வாகை, மூங்கில், ஈட்டி, யூகலிப்டஸ், குமிழ், வேம்பு, மலைவேம்பு, கடம்பம், சந்தனம் மற்றும் தேக்கு ஆகியன.


     

நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்கள்

  மண் மற்றும் வேர்ப்பூஞ்சாணங்களான பியூசேரியம், பைட்டோப்தோரா, ரைசோக்டோனியா, ஸ்கிலரோடியம் மற்றும் சூடோமோனஸ் சொலனேசியரம் போன்ற பாக்டீரியாக்களும் நோய் ஏற்படுத்துகின்றன.


நோய்க்குறிகள்

1. கீழ்ப்பகுதி இலைகள் ஆரம்பத்தில் மஞ்சள் நிறமாக மாறி, உதிர்ந்து விடுகின்றன. 

2.பிறகு மஞ்சள் நிறம் வளர்ச்சியுறும் நுனிகளுக்குப்பரவி, ஒரு மாதத்திலே செடிகள் இறந்துவிடும்.

3. பாதிப்புற்ற செடிகளின் வேர்கள் நிறமாறி விடுகின்றன.

கட்டுப்படுத்தும் முறைகள்

      சுகாதாரப்பராமரிப்பு, தக்க சாகுபடி முறைகள் மற்றும் டைதேன் M 45 (0.3%) அல்லது பாவிஸ்டின் (0.2%) கரைசல் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். செடிப்பாத்திகளையும் 0.2மூ பாவிஸ்டின் கரைசலை நடவுக்கு முன் நேர்த்தி செய்தும் தடுக்கலாம்.