பல்வேறு தோப்பு மரங்களில் காணப்படுகிறது. குறிப்பாக யூகலிப்டஸ் மரத்தில் இந்த பூஞ்சாண தாக்குதல் காணப்படுகிறது.
1. மரத்தின் தண்டுப்பகுதி மற்றும் கிளைகளில் ஏற்படும் காயம்.
2. நோய்க்கிருமிகளின் வளர்ச்சிக்கு உகந்த தட்பவெப்ப நிலை.
வேலமரம், யூகலிப்டஸ், பைன், சால், சிசு, தேக்கு மற்றும் மருது ஆகியன.
போமா, போமோப்சிஸ் மற்றும் லேசியோடைபிளாடியா போன்ற பூஞ்சைகள் நோய் ஏற்பட காரணமாகின்றன.
அ) சற்றே தாழ்வான தண்டுப்பகுதியிலிருந்து 15-20 செ.மீ. நீளமுள்ள நிலத்தை ஒட்டியுள்ள பகுதிகள், தென்மேற்கு பருவமழைக்கு பின்னர் பாதிப்படைகின்றன.
ஆ) தாழ்வான பட்டை பழுப்பு நிறமடைந்து இறந்து விடும். பிளவு அதிகரித்து பட்டை நீளவாக்கில் வெடித்து காணப்படும்.
இ) ஒரு சில பிளவுகளில் பிசின் சுரப்பு காணப்படும்.
ஈ) பின் வாடிப்போய் இறந்துவிடும்.
களை எடுப்பு மற்றும் மண் வேலைகளின் போது செடிகள் மற்றும் இளம் மரங்களில் காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும். பொருத்தமான இடத்தேர்வு மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட மரரகங்களை தேர்வு செய்வது ஆகியன நீண்ட காலத்திற்கு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் வழிகளாகும்.
வேல மரத்தில் தண்டு சொறிநோய் பிளவை நோய்