Enquire Now
நோய் விளக்கம்
இது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மர இனங்களின் நாற்றங்கால்கள் மற்றும் இளம் தோப்புகளில் காணப்படுகிறது.

முன்பே தீர்மானிக்கப்பட்ட காரணிகள்
பொதுவாக வழக்கமான பருவமழைக்கு பின்பும், முறையாக பராமரிக்கப்படாத நாற்றங்கால்களிலும் ஏற்படும்.

பாதிக்கப்படும் மர இனங்கள்
 வாகை, சிசு, புங்கம், பாப்லார், தேக்கு, கடுக்காய் போன்ற மரச்செடிகளில் தாக்கும்.

நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்கள்
வாகையில் இந்நோயை ரேவனேலியா கிலிமென்சியே என்ற நுண்ணுயிரும், புங்கையில் ரேவனேலியா கோப்சோனி மற்றும் ரேவனேலியா ஸ்டிக்டிகா என்ற நுண்ணுயிர்களும் நோய் உண்டாக்குகின்றன. தேக்கில் ஒலிவியா டெக்டோனே கிருமியும், சிசுவில் மரவலியா அச்சோரா கிருமியும், கடுக்காயில் உரேடோ டெர்மினேலியே கிருமியும் நோய் உண்டாக்குகின்றன.
நோய்க்குறிகள்
1. பாதிக்கப்பட்ட இலைகளில் மஞ்சள் பழுப்புநிற பூஞ்சைப்படலம் பரவி காணப்படும். இலை மேற்பரப்பில் சாம்பல் நிறம் காணலாகும். பாதிக்கப்பட்ட இலைகள் முழு வளர்ச்சியடையாமலேயே உதிர்ந்து விடுகின்றன.
தேக்கில் அக்டோபர் - பிப்ரவரி மாதங்களில் இந்நோய் காணப்படுகிறது.

2. சிசுவில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இலைகளில் தாக்கம் ஏற்படுத்தும். பருவமழை பெய்தபின் நோய்த்தாக்குதல் குறையும். பாதிக்கப்பட்ட இலைகள் வளர்ச்சி குன்றியும், வடிவம் மாறியும் இருக்கும்.

3. கடுக்காய் இலைகளை நவம்பர் மாதத்தில் இந்நோய் தாக்குகிறது. அதிக நோய்த்தாக்கம் ஜனவரியில் இருக்கும். பாதிக்கப்பட்ட இலைகளின் அடிப்பகுதியில் கிருமிப்படலம் மஞ்சள் பழுப்பில் காணப்படும். முழுவளர்ச்சி அடையாமலே இலைகள் உதிர்ந்து விடுகின்றன.

கட்டுப்படுத்தும் முறைகள்

சுகாதார முறைகள் சரியான பராமரிப்பு மற்றும் 0.08% பேலிட்டன் கரைசலை இருவார இடைவெளியில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

ஆரம்ப தாக்குதல் காணப்பட்டதும் இலைகளை நறுக்கி, அப்புறப்படுத்தலாம். கந்தகம் கலந்த பூஞ்சைக்கொல்லி (சல்பாக்ஸ் 0.05% ஏ.ஐ) என்ற அளவில் தெளித்தும், மண்ணில் கரைத்து ஊற்றியும் கட்டுப்படுத்தலாம். பூஞ்சைக்கொல்லி பயன்படுத்திய ஒருமாதம் கழித்து உயிரி கட்டுப்பாட்டு முறைகளான சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ், டிரைகோ டெர்மாவிரிடி பயன்படுத்தியும் நோயை கட்டுப்படுத்தலாம்.