Enquire Now
நோய் விளக்கம்

  வெப்பமண்டல பிரதேசங்களில் பரவலாக காணப்படும் பூஞ்சை நோய்க்கிருமியால் ஏற்படும் இந்நோய் தோப்பாக வளரும் முக்கிய மரஇனங்களை தாக்குகிறது.



முன்பே தீர்மானிக்கப்பட்ட காரணிகள்
  வெப்பமான காற்று, ஈரப்பதம் உள்ள பகுதிகளில் நோய் தீவிரமடைகிறது. நோய்க்கிருமியானது எல்லா வயதுள்ள மரங்களையும் பாதிக்கிறது. காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் மூலம் நோய்த்தொற்று பரவுகிறது. 250 செ.மீ கோடை மழைப்பொழிவுள்ள வெப்ப மண்டல சூழ்நிலைகளில் தோப்புகளில் திடீர்த்தொற்று ஏற்படுகிறது.

பாதிக்கப்படும் மர இனங்கள்

 உலகின் பல நாடுகளிலும் பரவலாக காணப்படும் இந்நோய், யூகலிப்டஸ் மற்றும் இதர மர இனங்களை தாக்குகிறது. இந்தியாவில், யூகலிப்டஸ் சிட்ரியோடோரா, யூகலிப்டஸ் குளோபுலஸ், யூகலிப்டஸ் கிராண்டிஸ், யூகலிப்டஸ் டெரட்டிகார்னிஸ் ஆகியவற்றையும், மாஞ்சியம், வேம்பு, சவுக்கு, மா, புளி, தேக்கு, சவுண்டால் ஆகியவற்றையும் தாக்குகிறது.


நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்கள்

 கார்ட்டீசியம் சல்மானிக்கலர் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது.


நோய்க்குறிகள்

1. செடிகள் மற்றும் இளமரங்களில் ஏற்படும் நுனிக்கருகல்

2. பட்டைக்கச்சை வளையம் ஏற்படுதல்

3. அதன் கீழ்ப்பகுதிகளில் பக்கவாட்டில் கிளைத்தல்

4. பட்டை வெடிப்பு, பிளவு ஏற்படுதல்

5. சொறிநோய் தோன்றி உள்மரப்பகுதி வெளிப்படுதல்

6. புரையில் பிசின் வடிதல்


கட்டுப்படுத்தும் முறைகள்

1. அதிக மழைப்பொழிவுள்ள பகுதிகளில், நோய் எதிர்ப்பாற்றல் பெற்ற மர ரகங்களை நடுதல்

2. நோய் எதிர்ப்பாற்றல் பெற்ற தனி மரங்களை கண்டறிந்து அவற்றை இனப்பெருக்கம் செய்து தோப்புகளை உருவாக்குதல்

3. தாமிர பூஞ்சைக் கொல்லிகளை தெளித்தும் கேலிக்சின் தெளித்தும் இளந்தோப்புகளை நோய்த்தாக்குதலில் இருந்து காக்கலாம்

4. நோயுற்ற தனி மரங்கள் தோப்பைவிட்டு அகற்றப்பட வேண்டும் 

5. மழைக்கு முன்;பும் இடையிலும் தெளிக்கலாம் 

6. நோய் எதிர்ப்பாற்றல் ரகங்களை நட வேண்டும்