Enquire Now
நோய் விளக்கம்

ஒரே வகை மர இனத் தோப்புகளை தாக்கும் முக்கிய நோய் ஆகும். வேர்ப்பகுதியை தாக்கும் பூஞ்சைத் தொகுதியால் இது ஏற்படுகிறது. மரத்தின் வேர்கள் மூலம் பரவுகிறது.

முன்பே தீர்மானிக்கப்பட்ட காரணிகள்

1. ஓட்டும் தன்மையுள்ள மண், களிமண் நிலம்.

2. பொருத்தமில்லா இடத்தேர்வு.

3. குறைவான மர இனங்களின் எண்ணிக்கை.

4. குறைந்த மரபியல் பன்மை.

5. ஒரே வயதுடைய தோப்புகள் நோய்க்கிருமி தாக்குதலுக்கும், பரவவும் ஏதுவாகிறது.

6. அதிக வீரியமுள்ள நோய்க்கிருமிகள்.

7. கிருமிக்கு ஏற்புத்தன்மையுடைய மர இனங்கள்.

பாதிக்கப்படும் மர இனங்கள்
வேலமரம், வாகை, பாக்கு, கொன்றை, சவுக்கு, கோகோ, ஈட்டி, யூகலிப்டஸ், மா, பைன், வேங்கை, புங்கம், புளி, மருது போன்ற பல்வேறு மர இனங்களை தாக்கக்கூடியது ஆகும்.
நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்கள்

கேனோடெர்மா பூஞ்சை பல்வேறு மரவகைகளில் வேர் அழுகலை உண்டாக்குகிறது. பாலிபோரஸ் சொரியே, சால் மரத்திலும், போம்ஸ் அன்னோசஸ் ஊசி இலை மர இனங்களிலும் பெனியோபோரா ரைசோமார்போ மூலம் தேக்கிலும் நோய் ஏற்படுகிறது.

நோய்க்குறிகள்

அ) நுனிக்கருகல் மற்றும் குறைபாடுள்ள வளர்ச்சி.

ஆ) இலைகள் பழுப்பு நிறமாதல்.

இ) இளங்குருத்துகள் வாடத்தொடங்கும். நோய்முற்றிய நிலையில் இலைகள் பூராவும் உதிர்ந்து மான்கொம்பு தோற்றத்தில் காணப்படும். காற்றில் விழுந்துவிடும்.

ஈ)வனத்தோட்டங்களில் நோய் தாக்கிய மரத்தொகுதி வட்ட வடிவில் இருக்கும். சுற்றிலும் கிருமித்தொற்று வேர்மூலம் பரவுவதால், வெளிவட்டப்பகுதி குறைந்த பாதிப்புடனும், உள்வட்டம் தீவிர பாதிப்புடனும் இருக்கும்.

உ) வேர்வழித் தொற்று பரவப்பரவ பாதிப்பு வட்டம் பெரிதாகி வரும்.

ஊ) நோயுற்ற மரத்தின் வேர் வெளிப்பகுதிகளில் நோய்வெண்படலம் காணப்படும்.



கட்டுப்படுத்தும் முறைகள்
எந்திரமயமாக்கப்பட்ட தோப்புகள்: வேர்த்தண்டுகள் மற்றும் வேர்களை நீக்கவும், நல்ல முறையில் மண்ணைக் கிளறிவிட, மரவளர்ச்சியும், நோய் எதிர்ப்பாற்றலும் கிடைக்கும்.

வேர்த்தண்டுகளை முற்றிலுமாக களைய வேண்டும்.

ஒரு அடி அகலமும், இரண்டு அடி ஆழமும் 5 அடி நீளமும் கொண்ட குழி எடுத்து விடுவதன் மூலம் நோய் பரவலை தடுக்கலாம்.

பல இன மர தோப்பு: நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட பல மர இனங்களை நடவு செய்தல்.

சாகுபடி முறைகள்: கட்டுக்குள் எரித்தல் முறையில் பூஞ்சையை குறைத்தல் மற்றும் களைக்கட்டுப்பாடு.