சவுக்கில் ஏற்படும் மிகத்தீவிரமான நோய்களில் இதுவும் ஒன்று. இளம் மற்றும் முதிர்ந்த தோப்புகளில், குறிப்பாக கடலோரப் பகுதி தோப்புகளில் ஏற்படுகிறது. நாட்டின் உள் பகுதிகளிலும் இது காணப்படுகிறது.
1. அதிக வறட்சி மற்றும் நோய் தாக்க ஏதுவான மர இனங்கள்.
2. டிரைகோஸ்போரியம் வெசிகுலோசம் என்னும் நோய்க்கிருமி காற்றினால் பரவி, நல்ல மரங்களின் தண்டுகளில் ஏற்பட்ட காயங்கள் மூலம் தொற்றுகிறது.
3. தொற்றானது வேர் வரை கீழும், தண்டு மூலம் மேலும் நெட்டுவாக்கில் பரவுகிறது.
4. சவுக்கில் இயல்பிலேயே காணப்படும் வேர்ப்பரவல் காரணமாக வேர் வழியிலும் ஒரு மரத்திலிருந்து பிறிதொரு மரத்துக்கு பரவுகிறது.
பல்வேறு வயதில் இருக்கும் சவுக்குத் தோப்புகளை வெகுவாக பாதிக்கிறது.
சுப்ரமணியனோஸ்போரா என்னும் கிருமியால் உண்டாகிறது (டிரைகோஸ்போரியம் வெசிகுளோசம்)
அ) இலை ஊசிகள் மஞ்சள் நிறமடைவது தொடக்க நிலை அறிகுறி.
ஆ) இலை ஊசிகள் வறண்டு, கிளைகள் மற்றும் தண்டுப்பகுதிக்கும் பரவுகிறது.
இ) வேகமான வாடல், பழுப்பு நிறமாதல் மற்றும் நுனிக்கருகல் தனி மரமாகவோ, தோப்பு முழுவதுமோ ஏற்படுதல்.
ஈ)நோய் முற்றிய நிலையில், பட்டைப் புண் தோன்றும்.
உ) பக்கவாட்டு வேர் மூலமாகவே நோய் பரவுவதால், தொகுதியாகவே மரங்கள் பாதிக்கப்படும்.
1. பொருத்தமற்ற முறையில் கவாத்து செய்தல் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
2. நோய் தாக்கிய தோப்பில் இருந்து, நோயுற்ற மரங்களை முழுவதுமாக அகற்றி, எரித்து விட வேண்டும்.
3. நோய்த் தடுப்பாற்றல் பெற்ற மர ரகங்களை பயன்படுத்த வேண்டும்.
4. டிரைகோடெர்மா மற்றும் சூடோமோனஸ் போன்ற உயிரி கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்தலாம்.
5. எக்டோ மைக்கோரைசல் மற்றும் அர்பஸ்குலர் மைகோரைசா போன்ற பூஞ்சாணங்களை செடி நடவுக்கு பயன்படுத்தும் மண் கலவையில் சேர்த்து உபயோகித்தல்.
சவுக்கில் தண்டுவாடல் பட்டைப்புண் நோய்
சவுக்கில் தண்டுவாடல் பட்டைப்புண் நோய்
சவுக்கில் தண்டுவாடல் பட்டைப்புண் நோய்
சவுக்கில் தண்டுவாடல் பட்டைப்புண் நோய்