இந்நோயானது வாகை, யூகலிப்டஸ், குமிழ், மலைவேம்பு, வேம்பு ஆகிய மரப்பயிர்களின் நாற்றங்கால்களிலும், நாற்று இனப்பெருக்க கூடங்களிலும் காணப்படுகிறது.
வழக்கமான பருவமழைக்கு பின்பும், நன்கு பராமரிக்கப்படாத நாற்றங்கால்களிலும் இந்நோய் வர வாய்ப்பு அதிகம்.
வாகை, ஈட்டி, யூகலிப்டஸ், குமிழ், வேம்பு, மலைவேம்பு ஆகியவை இந்நோய்க்கு இலக்காகக்கூடும்.
ரைசோக்டோனியா சொலானி என்னும் நோய்க்கிருமியால் இது ஏற்படுகிறது.
1. தரைப்பகுதிக்கு அருகில் உள்ள இலைகளில் முதலில் தோன்றுகிறது.
2. சாம்பல் கலந்த பழுப்பு நிறதிட்டுகள் இலை ஓரங்களில் காணப்படும். பிறகு அதன் வடிவ அளவு அதிகரித்து செல்லும்.
வாகையில் இலை வலைக்கருகல் நோய்
பாப்லார் மரத்தில் இலைவலைக் கருகல் நோய்