வனத் தோட்டங்களில் அதிக சேதாரத்தை ஏற்படுத்தும் நோய்களில் முதன்மையானது இந்நோயாகும். இட பூசணப்படலம் மற்றும் மரவகைக்கு ஏற்ப இந்நோயின் தாக்க விகிதம் மாறுபடுகிறது. பொதுவாக பட்டை மற்றும் வெளிதண்டுப்பகுதியே பெரிய பாதுகாப்பை மையத்தண்டுப்பகுதிக்கு அளிக்கிறது. வைரம் பாய்ந்த மரங்களை, சுமார் 15-30 ஆண்டு வயதுக்கு பிறகு தாக்குகிறது.
1. மரத்தின் உடல்பாகம் மற்றும் பட்டைகளில் ஏற்படும் காயம்.
2. வேர்ப்பகுதியில் தொற்று ஏற்பட்டிருந்தால் அதன்வழியே நுழைந்து, ஒவ்வொரு மரமாய் பரவுகிறது.
3. நோயுற்ற வேர்கள் மற்றும் தேவையற்ற நோயுற்ற மரக்குவியல்கள் மூலம் பரவுகிறது.
வேலமரம், வாகை, தேவதாரு, யூகலிப்டஸ், பைன், சால், சிசு மற்றும் மருது ஆகியன.
கேனோடெர்மா, போம்ஸ், ஹைமனோ சேட்டே, டிரமேட்;ஸ் மற்றும் அர்மிலேரியா போன்ற பூஞ்சை இனங்கள்.
அ) முதல் அறிகுறியாக நிறமாற்றம் ஏற்படும். தண்டு மேல்பகுதி பச்சைஃபழுப்பு நிறமாகவும், தண்டு உள்பகுதி கருப்புஃகருஊதா நிறமாகவும் மாறி இருக்கும்.
ஆ) பூசணப்படலம், பூஞ்சை முடிச்சுகள், தண்டு வீக்கம், முடிச்சு வீக்கம், உடைந்த மேல் பகுதிகள், தண்டுப்பகுதி காயம் மற்றும் தழும்புகள், அடிமரப்பகுதி காயம், வெடிப்புகள் போன்றவை இருக்கும்.
அ) களை எடுக்கும்போது மரங்களில் காயம், சிராய்ப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆ) நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட மர ரகங்களை பயிரிடலாம்.
இ) தோப்பிலிருந்து நோயுற்ற மரங்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
சவுக்கில் மையல் அழுகல் நோய் மையல் அழுகல் நோய்